நிதித் துறை செயலருக்கு தேர்தல் ஆணையம் கண்டனக் கடிதம்

டில்லி

நிதித்துறை அமைச்சக அமைப்புக்கள் பாரபட்சமாக நடந்துக் கொள்வதாக தேர்தல் ஆணையம் கடிதம் எழுதி உள்ளது.

மக்களவை தேர்தல் அறிவிப்பு வந்த பிறகு நிதித்துறை அமைச்சக அமைப்புக்களான வருமான வரித்துறை, அமலாக்கத்துறை உள்ளிட்ட அமைப்புக்கள் பல அரசியல் தலைவர்கள் இல்லங்களில் சோதனைகள் நடத்தி வருகின்றன.   இந்த சோதனைகள் அனைத்தும் எதிர்கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் இல்லங்களில் மட்டும் நடைபெறுவதாக தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தேர்தல் ஆணையம் நேற்று வருமானத் துறை செயலருக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளது.   அந்த கடிதத்தில், “நிதி அமைச்சக அமைப்புக்கள் சோதனை என்னும் பெயரில் நடுநிலையற்ற, பாரபட்சமான வெறுப்புணர்ச்சியுடன் கூடிய நடவடிக்கைகள் எடுத்து வருவதற்கு  தேர்தல் ஆணையம் கடும் எதிர்ப்பை தெரிவிக்கிறது.

இது குறித்து ஏற்கனவே தேர்தல் ஆணையம் தனது கடிதம் மூலம் நிதித்துறைக்கு அறிவுறுத்தி உள்ளது.   அதை மீண்டும் அளிப்பதில் தேர்தல் ஆணையம் மிகவும் வருத்தம் அடைகிறது.

அரசியலமப்பு சட்டத்தின் கீழ் உள்ள அமைப்புக்களின் இத்தகைய நடவடிக்கைகள் மற்றும் விதி மீறல்கள் தேர்தல் ஆணையத்துக்கு மிகந்த மகிழ்வின்மையை அளிக்கிறது.   எனவே இனி வாரண்ட் இல்லாத எந்த ஒரு சோதனையையும் மற்றும் தேர்தல் ஆணையத்தின் முன் அனுமதி பெறாத எந்த நடவடிக்கையையும் நிதித்துறை எடுக்கக் கூடாது என இந்த கடிதத்தின் மூலம் தெரிவிக்கிற்து” என குறிப்பிடப் பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.