பறவைகாய்ச்சல் எதிரொலி: நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் இன்று மாலை ஆலோசனை…

நாமக்கல்: கேரளா உள்பட பல மாநிலங்களில் பறவைக்காய்ச்சல் பரவி வரும் நிலையில், நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் இன்று மாலை ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

கேரளாவில் கோட்டயம் மற்றும் ஆலப்புழா மாவட்டங்களின் சில பகுதிகளிலிருந்து பறவைக் காய்ச்சல் பரவுவதாகக் கூறப்படுகிறது, பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒரு கி.மீ சுற்றளவில் மற்றும் வாத்து, கோழிகள் மற்றும் பிற உள்நாட்டு பறவைகளை கொல்ல அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.  இதையடுத்து, கேரளாவிலும் பறவைக்காய்ச்சலை மாநிலபேரிடராக மாநில அரசு அறிவித்து உள்ளது.

பறவை காய்ச்சல் காரணமாக சிக்கன் மற்றும் முட்டைகளை விற்கும் கடைகளை 15 நாட்கள் மூடுமாறு மத்திய பிரதேசத்தில் உள்ள மண்ட்சார் மாவட்ட அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

தமிழகத்திலும் கோழிப்பண்னைகள் அதிகம் உள்ள நாமக்கல் மாவட்டத்தில், மேற்கொள்ளப்பட வேண்டிய தடுப்பு நடவடிக்கள் தொடர்பாக, மாவட்ட ஆட்சியர் மெஹராஜ் தலைமையில் இன்று மாலை ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த  கூட்டத்தில் அதிகாரிகள், கோழி பண்ணையாளர்கள்  உள்பட பல்வேறு துறையினர் பங்கேற்க உள்ளனர்.