டீசல் விலை உயர்வு எதிரொலி- தண்ணீர் விலை உயர்வு

மதுரை:
துரை திருப்பரங்குன்றத்தில் டீசல் விலை உயர்வால் தண்ணீர் விலை உயர்த்தப்பட்டதாக போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருப்பரங்குன்றம் தனியார் குடிநீர் வண்டி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில், தண்ணீர் விலை உயர்த்தப்பட்டதாகவும், இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அந்த போஸ்டரில், பெரியகுடம் தண்ணீர் ரூ.13, சிறிய குடம் ரூ.8, கைக்குடம் ரூ. 4 என்று அளவு வாரியாக தண்ணீருக்கான விலை குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இந்த விலை உயர்வுக்கு வாடிக்கையாளர்கள் முழு ஒத்துழைப்பு தரும்படி பணிவுடன் கேட்டு கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தண்ணீர் விலை உயர்ந்துள்ளது பொதுமக்கள் சமூக ஆர்வலர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.