அரசு போக்குவரத்து ஸ்டிரைக் எதிரொலி: சென்னையில் 5 நிமிடத்துக்கு ஒருமுறை மெட்ரோ ரயில் இயக்கம்…

சென்னை: தமிழகம் முழுவதும் அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் இன்று ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளதால், சென்னையில் 5 நிமிடத்துக்கு ஒருமுறை மெட்ரோ ரயில் இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.
14-வது ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாக நிறைவேற்றக் கோரி, தமிழகம் முழுவதும் அரசு பஸ் போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் தொடங்கி உள்ளது. அரசின் எச்சரிக்கையை மீறி போராட்டங்கள் தொடங்கி உள்ளது. இதனால் பல இடங்களில் போக்குவரத்து தடை பட்டுள்ளது.
இந்த நிலையில் சென்னை மக்களின் வசதிக்காக மெட்ரோ ரெயில் கூடுதலாக ரயில்களை இயக்குவதாக அறிவித்து உள்ளது.  5 நிமிடங்களுக்கு ஒரு ரயில் இயக்கப்படும் என்றும்,  காலை 11 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 8 மணி வரையிலும் மெட்ரோ ரயில் கூடுதலாக இயக்கப்படும் என கூறியுள்ளது.