ஜல்லிக்கட்டு பார்க்க ராகுல் வருகை எதிரொலி: மதுரையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு…

சென்னை:  உலகப்புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை காண நாளை  ராகுல்காந்தி மதுரை வருகிறார். இதையொட்டி மதுரையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தமிழர்களின் வீரத்தை பறைச்சாற்றும்  ஜல்லிக்கட்டுப் போட்டி பொங்கலை பண்டிகையையொட்டி நாளை முதல் தொடங்குகிறது. முதல்போட்டியாக நாளை, மதுரை அவனியாபுரத்தில் போட்டிகள் நடைபெற உள்ளது. இந்த போட்டியை காண ராகுல் மதுரை வருகிறார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் பிரசாரத்திற்காக ஜனவரி இறுதியில் ராகுல்காந்தி தமிழகம் வர இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், திடீரென ஜல்லிக்கட்டு போட்டியை காண ராகுல் நாளை தமிழகம் வருகிறார்.

மதுரை அவனியாபுரத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டியை பார்க்க உள்ளார். இதையொட்டி மதுரையில் போலீஸ் பாதுகாப்பு  போடப்பட்டுஉள்ளது.