வேலூர்: சசிகலா வரும் 8ந்தேதி தமிழகம் வரும் நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஏற்கனவே வேலூர் மாவட்டத்தில் திட்டமிட்டிருந்த சுற்றுப்பயணத்தை மாற்றி உள்ளார்.

சிறையில் இருந்து ஜனவரி 27ந்தேதி விடுதலையானா சசிகலா,பெங்களூருவில் ஓய்வு எடுத்து வருகிறார். அவர் 8ந்தேதி பெங்களூருவில் இருந்து ஓசூர் மற்றும் வேலூர் மாவட்டம் வழியாக சென்னை திரும்பபுகாறர். அவரை வரவேற்க பிரமாண்ட ஏற்பாடுகளை டிடிவி தினகரன் வகையறாக்கள் செய்து வருகின்றனர். சசிகலா வருகை  தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கிடையில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி,  வேலூர் மாவட்டத்தில் சட்டப் பேரவை தேர்தல் பிரசாரம் செய்வதா அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி,   ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் உள்ளிட்ட ஒருங்கிணைந்த மாவட்டங்களில் பிப்வரி 8 மற்றும் 9-ம் தேதிகளில்  முதல்வரின் பிரச்சாரம் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன.

இந்த நிலையில், சசிகலா அந்த வழியாக 8ந்தேதி சென்னை திரும்ப இருப்பதால், பிரச்சினைகள் உருவாக வாயப்பு இருப்பதாக அஞ்சப்படுகிறது. இதைத் தொடர்ந்து, வேலூர் மாவட்டத்தில் முதல்வரின் பிரச்சாரமும் சசிகலா வருகையும் காவல் துறைக்கு சங்கடத்தை ஏற்படுத்தியது. இதன் அடிப்படையில். முதல்வரின் பிரச்சார தேதியில் மீண்டும் மாற்றம்  செய்யப்படுடுள்ளது.

அதைத்தொடர்ந்து முதல்வரின் வேலூர் மாவட்ட சுற்றுப்பயணம்  வரும் 9-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.