பாகிஸ்தான் மீது இந்தியா நேற்று ‘சர்ஜிகல் ஸ்டிரைக்’ நடத்திய பின்பு தமிழக அரசியல் நிலவரம் தலைகீழாக மாறி விட்டதாக குதூகலிக்கிறார்கள்-.அ.தி.மு.க.வினர் .

ஒதுங்கிப்போன கட்சிகள் எல்லாம் அ.தி.மு.க .கூட்டணிக்குள் இரு நாட்களில் வந்து விடும் என்பது அவர்கள் நம்பிக்கை.

சிபாரிசுகள் ஏற்கப்படாததால் முறைத்துக்கொண்ட புதிய தமிழகம்  தலைவர் டாக்டர் கிருஷ்ண சாமியுடன் , மத்திய அமைச்சர் பியூஷ்கோயல் நேற்று பேசி உள்ளார்.  இதையடுத்து  அ.தி.மு.க .கூட்டணியில் சேர அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

ஏற்கனவே பேசியபடி கிருஷ்ணசாமிக்கு தென்காசி ஒதுக்கப்பட்டுள்ளது. ஜி.கே.வாசனுக்கு மயிலாடுதுறை, ஏ.சி.சண்முகத்துக்கு வேலூர் என ஒதுக்கியாகி விட்டது. மூவரும் அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்தில் நிற்பார்கள்.

தே.மு.தி.க.வும் சரி சொல்லி விட்டது.

கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரும் வரும் 6 ஆம் தேதி சென்னையில்  ஒரே மேடையில் சங்கமிக்க உள்ளனர்.

கேளம்பாக்கத்தில் பிரதமர் மோடி அன்றைய தினம் –பிரச்சாரம் தொடங்குகிறார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, டாக்டர் ராமதாஸ், உள்ளிட்ட தலைவர்களை இந்த மேடையில் பார்க்கலாம்..

–பாப்பாங்குளம் பாரதி