சென்னை: தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு, தற்போது, காற்றழுத்தத்தாழ்வு மண்டலமாக மாறி உள்ளது. இது இன்னும் 24 மணி நேரத்தில் புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து,   புதிதாக வரவுள்ள புரெவி புயல் மற்றும் அதன் முன்னெச்சரிக்கை குறித்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

தமிழகத்தில் கடந்த வாரம் நிவர் புயல் வந்து, மக்களை பயமுறுத்தியது. இதனால் சில மாவட்டங்களில் பாதிப்பு ஏற்பட்டது. மேலும் அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சேதங்கள் தவிர்க்கப்பட்டன. இந்த நிலையில், தற்போது புதிய புயல் உருவாகி வருகிறது. இந்த புயல் தென்மாவட்டங்களில் பாதிப்பை ஏற்படுத்தும் என கணிக்கப்பட்டு உள்ளது.

இதையடுத்து, புயல், கனமழை முன்னெச்சரிக்கை தொடர்பாக சென்னையில் உள்ள தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை  மேற்கொண்டுள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.

இந்த ஆலோசனையில்,வடகிழக்கு பருவமழையின் அளவு, நிவர் புயல் பாதிப்புகள்,புதிதாக வரவுள்ள புரெவி புயல் மற்றும் அதன் முன்னெச்சரிக்கை குறித்தும் மேற்கொண்டு வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென் கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத்தாழ்வு மண்டலம் 24 மணி நேரத்தில் புயலாக மாறும்! வானிலை மையம்