அரைஇறுதியில் இந்தியா தோல்வி எதிரொலி: கோடிக்கணக்கான ரூபாய் இழப்புகளை சந்தித்து வரும் நிறுவனங்கள்…

லண்டன்:

ரைஇறுதியில் இந்தியா தோல்வி காரணமாக, இறுதிப்போட்டிக்கு செல்ல முடியாத நிலையில், இறுதிப்போட்டியை எதிர்கொள்ளும் என எதிர்பார்த்த ஊடகங்கள் உள்பட பல்வேறு நிறுவனங்கள் கோடிக்கணக்கான ரூபாய் இழப்புகளை சந்தித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

டப்பு உலக கோப்பையை இந்த ஆண்டு இந்தியா கைப்பற்றும் என எதிர்பார்த்து ஏராளமான ரசிகர்கள் இறுதிப்போட்டியை காண விமான டிக்கெட்டுக்கள் முன்பதிவு செய்து வைத்திருந்தனர். மேலும்,  ஏராளமான ரசிகர்கள் இறுதிப்போட்டியை காண மைதானத்திற்கான டிக்கெட்டும் பதிவு செய்து வைத்திருந்தனர்.

ஆனால், துரதிருஷ்டவசமாக, அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணியுடன் ஆடிய ஆட்டத் தில், இந்தியா தோல்வி அடைந்து, வெளியேறிய நிலையில் தற்போது இந்திய ரசிகர்கள் விமான டிக்கெட்டுகளையும், ஆட்டத்தை காண வாங்கப்பட்டிருந்த டிக்கெட்டுகளையும் ரத்து செய்து வருகின்றனர். இது மட்டுமின்றி, ஊடகங்களில் முன்பதிவு செய்யப்பட்ட கோடிக்கணக்கான ரூபாய்க்கன விளம்பரங்களும் ரத்து செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

12வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்திய அணி  ஆடிய ஆட்டங்களில் வெற்றி பெற்று வந்த நிலையில், இடையில் இங்கிலாந்து அணி உடனான போட்டியில் முதன்முறையாக தோல்வியை சந்தித்தது. இதன காரணமாக இந்திய அணி இறுதிப்போட்டிக்கு சென்று உலக கோப்பையை கைப்பற்றும் என அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தனர்.

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டியில் எப்படியும் இந்தியா தகுதி பெறும் என்று கணித்து ஏராளமான இந்தியர்கள் டிக்கெட்டுக்களை முன்பதிவு செய்திருந்தனர். அதுபோல இறுதிபோட்டியை காண லண்டன் செல்லவும் உலகம் முழுவதும் இருந்து ஏராளமான கிரிக்கெட் ரசிகர்கள் விமான டிக்கெட்டுகளும் பதிவு செய்திருந்தனர்.

ஆனால், அரை இறுதி போட்டியின்போது, இயற்கை சதி செய்த நிலையில், ஆட்டம் நடைபெறு வதில் பல்வேறு சிக்கல்கள் எழுந்த நிலையில் 2 நாட்களாக அரையிறுதி ஆட்டம் நடைபெற்றது. இதில், இந்திய அணி துரதிருஷ்டவசமாக தோல்வியை சந்தித்து, வெளியேறியது.

இதையடுத்து,   அதிர்ச்சி அடைந்த இந்திய கிரிக்கெட் ரசிகர்கள், இறுதிப்போட்டிக்கு வாங்கியிருந்த டிக்கெட்டுக்களை கேன்சல் செய்து வருகின்றனர். ஒரே நாளில் மட்டும்  சுமார் 29 ஆயிரம் டிக்கெட்டுக்கள் கேன்சலாகியிருப்பதாகவும் இந்த எண்ணிக்கை இறுதி போட்டி நடைபெறுவதற் குள் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் லண்டனில் இருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், இந்த டிக்கெட்டுக்கள் இறுதிப்போட்டியை காண வரும், நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து ரசிகர்களால் விற்பனையாகிவிடும் என்று நம்பப்படுவதாகவும் கூறப்படுகிறது.

இதுமட்டுமின்றி, லண்டனுக்கு பயணம் செய்ய பதிவு செய்திருந்த  ஏராளமான இந்தியர்கள் விமான டிக்கெட்டுக்களையும் தற்போது ரத்து செய்து வருகிறார்கள். இதன் காரணமாக லட்சக்கணக்கான ரூபாய்  இழப்பு ஏற்படும் வாய்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

அத்துடன், இறுதிபோட்டியின்போது, ஊடகங்களில் இடையிடையே வெளியாகும் விளம்பரங்கள் செய்ய ஏராளமான நிறுவனங்கள்  முன்பதிவு செய்திருந்த நிலையில், தற்போது அந்த விளம்பரங் கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக  ஊடகங்களுக்கு கோடிக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்தியா இறுதிப்போட்டிக்கு செல்லாததால் பல்வேறு விதங்களில் பொருளாதார நஷ்டங்கள் ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

கார்ட்டூன் கேலரி