பெட்ரோல் பங்க்களில் மோடி படத்தை அகற்ற தேர்தல் ஆணையம் உத்தரவு

கொல்கத்தா:
72 மணி நேரத்திற்குள் பெட்ரோல் பங்க்களில் உள்ள பிரதமரின் புகைப்படம் இடம் பெற்ற விளம்பரப்பலகைகளை அகற்ற தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

பிப்ரவரி 26 அன்று மாநிலத்திற்கான தேர்தல் தேதிகளை தேர்தல் கமிஷன் அறிவித்ததை அடுத்து தேர்தல் நடத்தை விதிமுறை நடைமுறைக்கு வந்தது.

இந்நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர், தேர்தல் கமிஷன் அதிகாரியை சந்தித்து பல்வேறு மத்திய திட்டங்களைப் பற்றி மக்களுக்குத் தெரிவிக்கும் மோடி புகைப்படம் இடம் பெற்ற வில்ம்ப்ரப்பலகாசி பயன்படுத்துவது தேர்தல் விதிமுறை மீறல் என்று குற்றம் சாட்டினார்.

இதையடுத்து மேற்கு வங்க தலைமை தேர்தல் அதிகாரி தெரிவிக்கையில், பிரதமரின் புகைப்படம் இடம் பெற்றுள்ள விளம்பர படங்களை பயன்படுத்துவது தேர்தல் விதிமுறை மீறலாகும் என்று கூறியுள்ளார்.