புதுடெல்லி: விவிபிஏடி இயந்திர சீட்டுகளுக்கும், வாக்குப்பதிவு இயந்திர வாக்குகளுக்கும் இடையிலான எண்ணிக்கையில் முரண்பாடு ஏற்பட்ட புகாரின் அடிப்படையில், அதுதொடர்பான விசாரணையை மேற்கொள்ள தனி குழுக்களை நியமித்துள்ளது தேர்தல் கமிஷன்.

மொத்தம் 1.25 கோடி விவிபிஏடி சீட்டுகள் எண்ணப்பட்டதில், 51 அல்லது 0.0004% மட்டுமே முரண்பாடாய் இருந்தது என்று தேர்தல் கமிஷன் தரப்பில் கூறப்படுகிறது.

தலைமை தேர்தல் கமிஷன் இந்த முரண்பாடுகள் தொடர்பாக ஆராயும்படி, தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. மணிப்பூர் தொடர்பான புகாரில் இன்னும் விசாரணை குழு அமைக்கப்படவில்லை.

மேலும், இந்த விசாரணையை நிறைவுசெய்ய மொத்தம் 10 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. வாக்குப்பதிவு இயந்திரங்களின் தொழில்நுட்பம், நடைமுறை, நுட்பமான அமைப்பு மற்றும் மனித தவறுகள் குறித்து உறுதிசெய்ய இந்த எண்ணிக்கை வித்தியாச முரண்பாடு குறித்து மிகவும் விரிவான முறையில் விசாரணை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.