பொருளாதார மேதைகள் விவசாயம் செய்து பார்க்க வேண்டும் : ப. சிதம்பரம்

பெங்களூரு

விவசாயக்கடன் தள்ளுபடி குறித்து விமர்சிக்கும் பொருளாதார மேதைகள் விவசாயம் செய்து  பார்க்க வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் ப சிதம்பரம் கூறி உள்ளார்.

நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாயக் கடன்கள் பத்து நாட்களுக்குள் தள்ளுபடி செய்யும் என அறிவித்திருந்தது.   அதற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு ஏற்பட்டது.   அதனால் காங்கிர மூன்று மாநிலஙக்ளில் ஆட்சியை பிடித்தது.

காங்கிரஸ் ஆட்சியை பிடித்துள்ள மாநிலங்களான சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் விவசாயக்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.   இதற்கு பல  பொருளாதார மேதைகள் கடுமையாக விமர்சனங்கள் தெரிவித்துள்ளனர்.    விவசாயக் கடன் தள்ளுபடி செய்யக் கூடாது என அவர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர்.

இந்நிலையில் பெங்களூருவில் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் மூத்த காங்கிரஸ் தலைவர் ப சிதம்பரம், “நாட்டில் தற்போது விவசாயிகள் கடும் துயரத்தில் உள்ளனர்.  அவர்களின் துயரத்தை துடைக்க காங்கிரஸ் விவசாயக் கடன் தள்ளுபடியை அறிவித்துள்ளது.     இந்த நடவடிகைகளை பல  பொருளாதார மேதைகள் விமர்சிக்கின்றனர்.

இவ்வாறு விமர்சனம் செய்யும் பொருளாதார மேதைகள் விவசாயம் என்றால் என்ன என்பதை தெரிந்துக் கொண்டு விமர்சிக்க வேண்டும்.    அவர்கள் ஒவ்வொருவரும் 2 ஏக்கர் நிலத்தில் தொடர்ந்து 10 வருடம் விவசாயம் செய்த பிறகு இந்த கருத்துக்களை கூற வேண்டும்.     மக்கள் விவசாயக் கடன் தள்ளுபடி சரியான நடவடிக்கை என கருதுவது சரி என்பது அப்போது பொருளாதார மேதகளுக்கு  புரியும்.

நாட்டில் தற்போது 10 கோடிக்கும் மேற்பட்ட  குடும்பங்கள் விவசாயக் குடும்பங்கள் ஆகும்.   அதில் சுமார் 5.28 கோடி குடும்பங்களுக்கு கடன் உள்ளது.  அவர்களின் சராசரி ஆண்டு வருமானமே ரூ.90,000 லிருந்து 1 லட்சமாக இருக்கும் போது இந்த குடும்பங்களால் எவ்வாறு கடனை திருப்பிச் செலுத்த முடியும்” என கேள்விகள் எழுப்பி உள்ளார்.