சூரத்:

‘‘பொருளாதார வளர்ச்சி குறித்து விரைவில் முடிவுக்கு வர முடியாது’’ என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

கடந்த 5 காலாண்டுகளில் உள்நாட்டு உற்பத்தி தொடர்ந்து சரிவை சந்தித்து வந்தது. பணமதிப்பிழப்பு மற்றும் ஜி.எஸ்.டியால் இந்த சரிவை சந்திக்கும் என பேசப்பட்ட நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன் வந்த தகவலின் படி உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 6.3 சதவீதமாக உள்ளது. இது கடந்த 5 காலாண்டு வீழ்ச்சியில் இருந்து மீண்டுள்ளது.

இதுகுறித்து முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறுகையில், ‘‘கடந்த 5 காலாண்டு விழச்சியடைந்த நிலையில் இந்த முன்னேற்றத்தை வைத்து பொருளாதார முன்னேற்றத்தை இவ்வளவு சீக்கிரம் முடிவு செய்ய முடியாது. மேலும் இந்த அறிக்கை நாட்டின் 30 சதவீத வளர்ச்சியை கொண்ட முறைசாரா துறைகள், சிறு மற்றும் நடுத்தர தொழில்துறைகளின் தாக்கத்தை கணக்கில் கொள்ளவில்லை.

மேலும் விவசாயத்துறை வளர்ச்சி 2.3 சதவீதத்தில் இருந்து 1.7 சதவதமாக குறைந்துள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலாண்டில் 4.1 சதவீதமாக இருந்தது’’ என்றார்.