டில்லி

நாட்டில் பண விக்கத்தை கட்டுக்குள் வைக்க எரி பொருள் மீதான வரிகளை அரசு குறைக்க வேண்டும் என பொருளாதார நிபுணர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

இந்தியாவில் பண வீக்கம் 6% அளவில் உள்ளது.  இது அதிகபட்ச கட்டுப்பாட்டு எல்லைக்குள் உள்ளது எனினும்  ரிசர்வ் வங்கியின் கொள்கை கூட்டத்தில் இது குறித்து வெகுவாக பேசப்பட்டுள்ளது.   இந்த கூட்டத்தில் எரிபொருள் மீதான வரி உயர்வால் விலை அதிகரிப்பது குறித்து எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

கச்சா எண்ணெய் விலலியில் ஒவ்வொரு பாரலிலும் 10 டாலருக்கான மாற்றத்தால் பண வீக்கம் 20-30 புள்ளிகள் வரை உயரும் என ரிசர்வ் வங்கியின் கணக்கெடுப்பு மூலம் தெரிய வந்துள்ளது.   இந்தியாவைப் பொறுத்த வரை சர்வதேச கச்சா எண்ணெய் விலையின் தாக்கம் பொருளாதாரத்திலும் தாக்கத்தை உண்டாக்கி பண வீக்கத்தை அதிகரிக்கச் செய்கிறது.

அதன் மீது இந்திய அரசு மற்றும் மாநில அரசுகள் விதிக்கும் வரி விகிதத்தால் விலை உயர்ந்து பண வீக்கம் மேலும் அதிகரிப்பதாகப் பொருளாதார நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.  எரிபொருள் விலை அதிகரிக்கும் போது அனைத்து பொருட்களின் அடக்க விலைகளும் அதிகரிக்கின்றன என்பது அனைவரும் அறிந்த ஒன்றாகும்.

எனவே எரிபொருள் மீதான வரிகளை அரசு குறைப்பதன் மூலம் பண வீக்கத்தைக் கட்டுப்படுத்த முடியும் எனப் பொருளாதார நிபுணர்கள் வலியுறுத்தி உள்ளனர்.   இந்த 2021-22 நிதி ஆண்டில் பற்றாக்குறை 7.5% அதிகரிக்கும் என நிபுணர்கள் கணக்கிட்டுள்ளனர்.  எனவே இதைக் குறைக்கக் எரிபொருள் விலையில் லிட்டருக்கு ரூ,5 வரை வரிக்குறைப்பு செய்ய வேண்டும் என அறிவுறுத்தி உள்ளனர்.