ஆகஸ்ட் முதல் வாரத்திற்கான பாராளுமன்ற நிகழ்ச்சிநிரலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
இதனை வெளியிட்டுப் பேசிய பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி
” அரசியலமைப்பு 122வது சட்ட திருத்த மசோதா,2014யை நிறைவேற்ற இந்தவாரம் விவாதம் நடத்தப்படும் எனத்தெரிவித்தார்.

சரக்கு சேவை வரி: மறைமுக வரிகளுக்கு மாற்றாக நேரடி வரி வரிவிதிப்பு முறை

சரக்கு-சேவை வரி( ஜி.எஸ்.டி) மசோதாவை நிறைவேற்றிவிடும் முனைப்பில் மத்திய அரசு உள்ளது.
இதுகுறித்து பிரதமர் மோடி, அமித் ஷா, ராஜ்நாத் சிங், அருண் ஜேட்லி ஆகியோருடன் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.
வாழ்த்து கூறிக்கொள்கிறார்கள், நலம் விசாரிக்கிறார்கள்..
இந்த மசோதா குறித்து பாராளுமன்றத்தில் விவாதிக்க ஐந்து மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஜி.எஸ்.டி. சில குறிப்புகள்:
உலகின் பல நாடுகள் மறைமுக வரிகளால் ஏற்படும் நடைமுறைச் சிக்கல்களாலும், நாட்டின் வளர்ச்சியுடன் ஒத்துப்போகும் விதமாக நேரடி வரிவிதிப்பில் ஈடுபட்டுள்ளன. சமீபத்தில் 2014ம் ஆண்டு மலேசியாவிலும் ஜி.எஸ்.டி அமல் படுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் வசூலிக்கப்படும் அனைத்து மறைமுக வரிகளுக்கும் மாற்றாக, சரக்கு மற்றும் சேவை வரியை (ஜி.எஸ்.டி.) கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இதுதொடர்பான அரசியல் சட்ட திருத்த மசோதா, கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் மக்களவையில் நிறைவேறியது.
ஆனால், டெல்லி மேல்–சபையில் இன்னும் நிறைவேறவில்லை.
இதனால், இந்த ஆண்டு ஏப்ரல் 1–ந் தேதி அமல்படுத்த திட்டமிட்டிருந்த ஜி.எஸ்.டி. வரியை இன்னும் அமல்படுத்த முடியவில்லை.
எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி சில நிபந்தனைகளை விதித்து வருகிறது.
இதற்கிடையே, மாநில அரசுகளுடன் மத்திய அரசு ஜூலை 26ம் தேதி நடத்திய ஆலோசனை கூட்டத்தில் கருத்தொற்றுமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிகின்றது.
இந்த மசோதாவில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களைப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்தக் கூட்டத்தில் மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
மூன்று முக்கிய திருத்தங்கள் மசோதாவில் சேர்ப்பு:
1. காங்கிரஸின் கோரிக்கை ஏற்பு: மாநிலங்களுக்கிடையே பொருட்களைக் கொண்டு செல்லும்போது, அப்பொருட்களின் மீது சம்பந்தப்பட்ட மாநிலம், ஜி.எஸ்.டி. வரிக்கு மேல் கூடுதலாக 1 சதவீத வரியை விதிக்க வகை செய்யப்பட்டு இருந்தது. இந்தக் கூடுதல் வரி ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் காங்கிரசிடம் பாஜ க அரசு பணிந்துள்ளது.
2. ஜி.எஸ்.டி மூலம் மாநில அரசுகளுக்கு ஏற்படும் இழப்பை ஈடுகட்ட அரசு ஐந்து ஆண்டுகளுக்கு இழப்பீடு வழங்கப் படும்
3. இவ்வரி விதிப்பில் ஏற்படும் முரண்பாடுகளை விசாரித்துத் தீர்க்க மத்திய–மாநில அரசுகளின் பிரதிநிதிகள் அடங்கிய ஜி.எஸ்.டி. கவுன்சில் அமைக்கப்படும்.
திருத்தப்பட்ட மசோதா மேல்சபையில்நிறைவேற்றப்பட்ட பின்னர் மீண்டும் மக்களவையில் தாக்கல் செய்யப்படும்.
அதன் பின்னர் இந்தியாவில் உள்ள அனைத்து மாநில சட்டசபையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட வேண்டும்.
எண்ணிக்கையில் பாதிக்கும் மேல் மாநில சட்டசபைகளில் ஒப்புதல் கிடைக்க வேண்டும்.
அதன் பின்னரே இது சட்டவடிவம் பெறும். இந்தச் சட்டத்தை 2017-ஏப்ரல் 1 முதல் அமல்படுத்த மத்திய அரசு திட்ட மிட்டுள்ளது.
முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரசின் கோரிக்கை ஏற்பு மற்றும் மாநில அரசுகளின் கோரிக்கை ஏற்பு காரணமாக இம்மசோதாவை சட்டமாக்கிவிடும் நம்பிக்கையில் உள்ளது மத்தியஅரசு.
30-1467288956-jayalalitha7778தமிழக அரசு  எதிர்ப்பு: ஜி.எஸ்.டி., கவுன்சில் எனப்படும் தன்னிச்சையான அரசமைப்புச் சட்ட அமைப்பு உருவாக்கப்பட்டால், நிதி விவகாரங்களில் மாநிலங்களுக்கான சுதந்திரத்தில் சமரசம் செய்து கொள்ளப்படும் எனவும், இந்த அமைப்பு முறைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் தமிழகம் தெரிவித்துள்ளது.   இந்த சுயாட்சி பெற்ற அமைப்பு, மாநிலங்களின் நிதி விவகாரங்களில் சமரசம் செய்து கொள்ள வழி ஏற்படும். எனவே, இப்போது இருக்கக் கூடிய மாநில அமைச்சர்கள் அடங்கிய அதிகாரம் அளிக்கும் குழுவே போதுமானது என தமிழக அரசு நம்புகிறது. எனவே இதுகுறித்து விரிவான விவாதம் அவசியம் எனத் தெரிவித்துள்ளது.
இந்தக் கூட்டத்தொடரில் நிறைவேறுமா இந்த ஜி.எஸ்.டி. மசோதா அல்லது அமளிதுமளியில் தள்ளிவைக்கப்படுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.