பிஎன்பி வங்கி மோசடி: நிரவ் மோடியின் ரூ. 255 கோடி ஹாங்காங் சொத்துக்கள் முடக்கம்

டில்லி:

ஞ்சாப் நேஷனல் வங்கி ஊழல் தொடர்பாக வெளிநாட்டில் தலைமறைவாக வாழ்ந்து வரும் பிரபல வைர வியாபாரியான  நிரவ் மோடியின் ரூ. 255 கோடி மதிப்புள்ள ஹாங்காங் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13000 கோடி வரை கடன் பெற்று அதை  திருப்பியளிக்காமல் வெளிநாடு தப்பி சென்று தலைமறைவாக வாழ்ந்து வருபவர்கள்  தொழிலதிபர் நீரவ் மோடி மற்றும் அவரது உறவினர் மெகுல் சோக்‌ஷி.

இவர்கள் மீது சிபிஐ, அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனது. அவர்களை இந்தியாவுக்கு அழைத்து வர முயற்சிகள் மேற்கொண்டுள்ளனர்.

நிரவ் மோடி வழக்கு தொடர்பாக ஏற்கனவே அவருக்கு சொந்தமான  ரூ.637 கோடி மதிப்பிலான இந்தியாவில் உள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது.  இந்நிலையில் தற்போது ஹாங்காங்கிலுள்ள ரூ. 255 கோடி சொத்துக்களும் சட்ட விரோத பணப்பரிமாற்ற சட்டத்தின் கீழ் முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்க துறை தெரிவித்துள்ளது.

இதுவரை நிரவ் மோடியின் ரூ. 4744 கோடி சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.