அமலாக்கத்துறை அதிகாரிகள் ஊடகங்களுக்கு பேட்டி அளிக்க கூடாது: இயக்குநர் சஞ்சய் குமார் மிஸ்ரா தடை

--

டில்லி:

மலாக்கத்துறை அதிகாரிகள் எந்தவொரு ஊடகங்களுக்கும்  பேட்டி அளிக்க கூடாது என்று அமலாக்கத்துறை இயக்குநர் சஞ்சய் குமார் மிஸ்ரா அதிரடி தடை விதித்துள்ளார்.

நாட்டின் உயர்ந்த அமைப்புகளில் ஒன்றான அமலாக்கத்துறை, புலனாய்வில் ஈடுபடுவது தொடர்பாக ஊடகங்களை சந்தித்து விளக்குவது வழக்கம். ஆனால், இனிமேல் ஊடகங்களை தொடர்புகொண்டு பேசக்கூடாது என்று  தடைவிதித்து அமலாக்கத் துறை இயக்குனரகம் உத்தர விட்டுள்ளது. மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமலாக்க இயக்குனரகத்தின் தலைமை இயக்குனர் சஞ்சய் குமார் மிஸ்ரா உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் மே 22-ம் தேதி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்,  அமலாக்கத் துறை  தலைமையகத்தில் உள்ள அனைத்து அதிகாரிகளும் ஊடகங்களுடனான தொடர்புகளில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்றும்,  தற்போது நடைபெற்று வரும் விசாரணைகள் தொடர்பான சில விவரங்கள், தகவல்கள் ஊடகங்களில் வெளிவருகின்றன. இந்த செய்திகளினால் தற்போது மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் நலன்கள் பாதிக்கப்படுகிறது என்றும் அதன் காரணமாக இனிமேல் அதிகாரிகள் யாரும் ஊடகங்களுக்கு பேட்டி அளிக்கக்கூடாது, மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அமலாக்கத்துறை தலைமை அலுவலகத்தில் நடைபெற்று விசாரணைகள் குறித்து, சில அதிகாரி கள் ஊடகங்களுக்கு தெரிவித்து விடுவதால், தேவையற்ற பிரச்சினைகள் உருவாகிறது. இதை தடுக்க அமலாக்கத் துறை இயக்குநர் ராஜீவ் குமார் இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.