முன்னாள் முதல்வர் மற்றும் அவர் மனைவி மீது அமலாக்க இயக்குனரகம் குற்றப்பத்திரிகை தாக்கல்

டில்லி

மாசலப் பிரதேச முன்னாள் முதல்வர் வீர்பத்ர சிங் மற்றும் அவர் மனைவி பிரதீபா உட்பட நான்கு பேர் மீது பண மோசடி செய்ததாக அமலாக்க இயக்குனரகம் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

இமாசலப் பிரதேச முன்னாள் முதல்வர் வீர்பத்ர சிங்.  இவர் மனைவி பிரதீபா சிங்.     தற்போது நடைபெற்ற தேர்தலில் தோல்வியுற்ற வீர்பத்ர சிங் மீது பண மோசடி புகார் ஒன்று அமலாக்க இயக்குனரகத்திடம் அளிக்கப் பட்டிருந்தது.

தற்போது இவர்கள் இருவர் மீதும் அமலாக்க இயக்குனரகம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.    இவர்கள் இருவரைத் தவிர யூனிவர்சல் ஆப்பிள் இணை அதிபர் சுன்னிலால் சௌகான்,  ஆயுள் காப்பீடு முகவர் ஆனந்த் சௌகான், ப்ரேம் ராஜ், லவன் குமார் ஆகிய நால்வர் மீதும் குற்றப்பத்திரிகை டில்லி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.   நீதிமன்றம் இது குறித்து விரைவில் தனது முடிவை அறிவிக்கும் என தெரிய வந்துள்ளது.

இது தவிர சிபிஐ ஏற்கனவே  இவர்கள் மீது மற்றொரு வழக்கு பதிந்துள்ளது.   அந்த வழக்கில் வீர்பத்ர சிங் வருமானத்துக்கு அதிகமாக ரூ. 10 கோடி வரை சொத்து சேர்த்துள்ளதக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.