அந்நிய செலாவணி வழக்கு: கார்த்தி சிதம்பரத்துக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ்

டில்லி,

ந்நிய செலாவணி மோசடி வழக்கில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு மத்திய அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

ரூ.45 கோடி அந்நிய செலாவணி மோசடி வழக்கில் விளக்கம் கேட்டு கார்த்தி சிதம்பரத்திற்கு அமலாக்கத்துறை இன்று நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பி விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.