நரேஷ் கோயல் தலைமறைவு? அன்னிய செலாவணி வழக்கில் தேடும் அமலாக்கத்துறை

டில்லி:

ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல் தலைமறைவாகி உள்ளதாக கூறப்படுகிறது. அவரை அன்னிய செலாவணி வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை தேடி வருகிறது.

மும்பை மற்றும் டில்லியில் உள்ள நரேஷ் கோயலுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை தேடியதாக கூறப்படுகிறது.

பெரும் கடனில் சிக்கித் தவிக்கும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம், அதன் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத நிலைக்கு தள்ளப்பபட்டது. அதைத் தொடர்ந்து  நிர்வாகக் குழுவிலிருந்து ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல் மற்றும் அவரது மனைவி அனிதா கோயல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு  ராஜினாமா செய்துள்ளனர்.

நிதி நெருக்கடியில் சிக்கி உள்ள ஜெர் ஏர்வேஸ் தனது அனைத்து சேவைகளையும் தற்காலிகமாக ஏப்ரல் 17 அன்று முதல் நிறுத்தி உள்ளது. ஜெட் ஏர்வேஸ் மீது திவாலான நிலை மற்றும் திவால் நிலைக் குறியீட்டின் கீழ்நடவடிக்கைக்கு  உட்பட்டுள்ளது.

ஜெட் ஏர்வேஸ் நிதி நெருக்கடியில் சிக்க காரணம், நிதி திசை திருப்பப்பட்டு உள்ளதாகவும், மேலும் பெரிய அளவில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகவும்  கார்ப்பரேட் விவகாரங்கள் அமைச்சின் (எம்.சி.ஏ) ஆய்வு அறிக்கை தெரிவித்து உள்ளது.

இந்த நிலையில் கடந்த மே மாதம் 25ந்தேதி அன்று நரேஷ் கோயல் தனது மனைவி அனிதாவுடன்  துபாய் விமானம் மூலமாக லண்டனுக்கு செல்ல மும்பை விமான நிலையத்தில் விமானத்தில் ஏறினார்கள்.  ஆனால், விமானம் கிளம்பி ரன் வேயில் பயணம் செய்யும் போது, உடனடியாக விமானம் திரும்ப அழைக்கபட்டது. அதைத்தொடர்ந்து விமானத்துக்குள் நுழைந்த அதிகாரிகள்,  நரேஷ் கோயலை வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறி விமானத்தை விட்டு இறக்கினர்.

இந்த நிலையில், அவரை அந்நிய செலாவணி சட்டத்தின் விதிகளின் கீழ் அமலாக்கத்துறை தேடி வருகிறது. மும்பை மற்றும் டில்லியில் உள்ள  நரேஷ் கோயலின் வளாகத்தில் அமலாக்கத் துறைகள் தேடியதாக கூறப்படுகிறது..

ஃபெமா விதிகளின் கீழ் அவரை தேடும் பணி  மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அவரிடம் இருந்து  கூடுதல் ஆதாரங்களைச் சேகரிப்பதற்காகவே அவரை தேடி வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

இதன் காரணமாக நரேஷ் கோயல் தலைமறைவாகி உள்ளது உறுதியாகி உள்ளது.

You may have missed