மும்பை

எல் அண்ட் எஃப்எஸ் பண மோசடி வழக்கில் மகாராஷ்டிர நவ நிர்மாண் சேனை தலைவர்  ராஜ் தாக்கரேவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது.

பிரபல நிதி நிறுவனமான ஐ எல் அண்ட் எஃப் எஸ் நிறுவனம் தனது முதலீட்டாளர்களுக்குப் பணத்தைத் திருப்பி தராமல் இருந்ததையொட்டி பண மோசடி வழக்குப் பதியப்பட்டுள்ளது.  இந்த வழக்கு விசாரணையைச் செய்து வரும் அமலாக்கத்துறை  இந்நிறுவனம் கடன் கொடுத்தவர்களைக் குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.

சிவசேனாவின் மூத்த தலைவரும் முன்னாள் மகாராஷ்டிர முதல்வருமான மனோகர் ஜோஷியின் மகன் உமேஷ் ஜோஷி ஆவார்.  மகாராஷ்டிர நவ நிர்மாண் சேனைத் தலைவர் ராஹ் தாக்கரே உடன் இணைந்து ஒரு நிறுவனத்தை நடத்தி வந்தனர்.  அந்த நிறுவனத்துக்கு ஐ எல் அண்ட் எஃப் எஸ் நிறுவனத்துக்கும் தொடர்பு உள்ளதாகத் தெரிய வந்துள்ளது.

தற்போது ஜோஷியின் நிறுவனத்தில் இருந்து ராஜ் தாக்கரே விலகிய போதிலும் அமலாக்கத்துறை அந்நிறுவனத்தின் பரிவர்த்தனைகளை ஆய்வு செய்து வருகிறது.  எனவே இந்த பண மோசடி வழக்கில் ராஜ் தாக்கரே மற்றும் உமேஷ் ஜோஷி ஆகிய இருவருக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.    உமேஷ் ஜோஷியை நாளை விசாரணைக்கு ஆஜராகவும்  ராஜ் தாக்கரேவை ஆகஸ்ட் 22 ஆம் தேதி ஆஜராகவும் சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ளது.