ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரத்துக்கு சம்மன்

டில்லி:

ஏர்செல்- மேக்சிஸ் வழக்கில் நாளை (5ம் தேதி) நேரில் ஆஜராகுமாறு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

ஏர்செல் -மேக்சிஸ் நிறுவனத்துக்கு 3 ஆயிரத்து 500 கோடி ரூபாய் வெளிநாட்டு முதலீடுக்கு அனுமதி அளித்ததில் முறைகேடு நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கில் நாளை நேரில் ஆஜராகுமாறு சிதம்பரத்துக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

விசாரணையை 6 மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் தான் கார்த்தி சிதம்பரத்தின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: ed summoned p chidambaram in aicel maxis case, ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் மேல்முறையீடு! அமலாக்கத்துறை அதிரடி
-=-