டில்லி:

டந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது, ஏர் இந்தியா நிறுவனத்தில் நடைபெற்ற  முறைகேடு  தொடர்பாக,  விசாரணைக்கு ஆஜராக அப்போதைய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பி உள்ளது.

அதன்படி,  ஆகஸ்ட் 23-ல் டெல்லியில் உள்ள  அமலாக்கத்துறை அலுவலகத்தில்  ப.சிதம்பரம்  நேரில் ஆஜராக வேண்டும் என கூறி உள்ளது.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது, விமானத்துறை அமைச்சராக பிரபுல் பட்டேல் இருந்தார். அப்போது ஏர்இந்தியா நிறுவனத்துக்கு விமானங்கள் வாங்கப்பட்டதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக புகார்கள் எழுந்தது. மேலும், சர்வதேச விமான நிறுவனங்களுக்கான விமான இடங்கள் ஒதுக்குவதில் முறைகேடுகள் நடந்ததாகவும், இதனால் ஏர் இந்தியாவுக்கு ஏற்பட்ட இழப்புக்கள் குறித்து விசாரிக்க வேண்டும் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில்,  முன்னாள் விமான போக்குவரத்து மந்திரி பிரபுல் படேலிடம்  ஏற்கனவே அமலாக்கத்துறை விசாரணை நடத்திய நிலையில், தற்போது, அதுகுறித்து விசாரணை நடத்த அமலாக்கத்துறை சிதம்பரத்துக்கு சம்மன் அனுப்பி உள்ளது. அதில், வரும் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 23 ம் தேதி ) விசாரணைக்கு டெல்லியில் உள்ள அமலாக்க இயக்குநரகம் அலுவலகத்தில் ஆஜராகும்படி குறிப்பிடப்பபட்டு உள்ளது.