நிரவ் மோடியின் ரூ. 56 கோடி துபாய் சொத்துக்கள் முடக்கம்

டில்லி

ங்கி மோசடி செய்து நாட்டை விட்டு ஓடிய நிரவ் மோடிக்கு துபாயில் ரூ.56.7 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது.

பிரபல வைர வியாபாரியான நிரவ் மோடி பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13000 கோடி அளவில் மோசடி செய்து விட்டு விசாரணைக்கு தப்பி குடும்பத்துடன் நாட்டை விட்டு ஓடி விட்டார். மற்றும் அவருடைய கூட்டாளி மெகுல் சோக்சியும் தப்பி ஓடி விட்டார். அவர்க்ள் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

நிரவ் மோடி மற்றும் மெகுல் சோக்சியை விசாரணைக்கு ஆஜராகும் படி அமலாக்கத் துறை பலமுறை நோட்டிஸ் அனுப்பி உள்ளது. ஆனால் விசாரணைக்கு ஆஜராகாமல் உள்ளனர். அவர்களை இந்தியா அழைத்து வர சிபிஐ முயன்று வருகிறது. ஆனால் சிபிஐ யால் அவர்களை இந்தியாவுக்கு கொண்டு வர முடியவில்லை.

நிரவ் மோடி விசாரணைக்கு ஆஜராகததால் இது குறித்து நடவடிக்கை எடுக்க அமலாக்கத்துறை முடிவு செய்தது. அதன்படி நிரவ் மோடிக்கு துபாயில் உள்ள ரூ.56.8 கோடி சொத்துக்களை முடக்க அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.