ராஜ்பவனில் ஜானதிபதியுடன் எடப்பாடி பழனிச்சாமி சந்திப்பு

சென்னை:

சென்னை ராஜ்பவனில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார்.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 2 நாள் பயணமாக இன்று தமிழகம் வந்தார். ராமேசுவரம் அருகே உள்ள மண்டபம் பகுதிக்கு சென்றார். பின்னர் ராமநாத சாமி கோவிலில் தரிசனம் செய்தார்.

அதைத் தொடர்ந்து பேய்க்கரும்பில் உள்ள முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் நினைவிடத்துக்கு சென்று அவர் மரியாதை செலுத்தினார். பின்னர், மதுரைக்கு காரில் சென்ற அவர் அங்கிருந்து விமானம் மூலம் சென்னை வந்தார்.

இந்நிலையில் சென்னை ராஜ்பவனில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை முதல்-வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார். ராஜ்பவனில் நடந்த விருந்து நிகழ்ச்சியில் ஜனாதிபதி, முதல்வர் பங்கேற்றனர்.

You may have missed