எடப்பாடி பழனிச்சாமியால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது…..அன்பழகன் பேட்டி

திருப்பூர்:

எடப்பாடி பழனிச்சாமியால் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது என திருப்பூரில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் பேட்டி அளித்தார்.

தமிழ்நாட்டின் எதிர்காலம் திமுகவின் வெற்றியில் தான் உள்ளது என்று தெரிவித்தார். மேலும் சொத்துக்குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு முழு திருப்தி அளிக்கிறது என்று அன்பழகன் தெரிவித்தார்