வைகோவிடம் முதலமைச்சர்  பழனிசாமி உஷார்: ஈவிகேஎஸ் எச்சரிக்கை

 

 

சென்னை:

சட்டப்பேரவையில் இருந்து திமுக எம்.எல்.ஏ.க்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டதைக் கண்டித்து திமுக சார்பில் தமிழகம் முழுவதும் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

சென்னையில் தங்கசாலை மணிகூண்டு அருகில் நடைபெறற போராட்டத்தில் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், ”தமிழகத்தில் முதலமைச்சராக இருந்தவர்கள் எல்லாம் சிறை சென்றுள்ளனர். அவர்கள் நாட்டுக்காகவும், மக்கள் நலனுக்காகவும் போராடியதால் சிறை சென்றனர். ஆனால் ஜெயலலிதா மட்டுமே ஊழல் செய்துவிட்டு சிறை சென்றவர் என்றார். மேலும்,

ஜெயலலிதா மரணம் குறித்து நாட்டு மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் அவரை கொன்றதாக கூறப்படும் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

தமிழக ஆளுநர் சட்டப்பேரவையை கலைத்துவிட்டு, தேர்தலை நடத்த வேண்டும், அது ஒன்று தான் சட்டப்பேரவையில் நடந்த நிகழ்வுக்குத் தீர்வாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.

கார்ட்டூன் கேலரி