நாங்குனேரி:

நாங்குனேரி இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தீவிர பிரசாரம் செய்து வருகிறார். அப்போது, அதிமுகவுக்கு திமுகவை விட 5 எம்எல்ஏக்கள் மட்டுமே அதிகம் உள்ளதால், எந்த நேரத்திலும் எடப்பாடி ஆட்சி கவிழும் வாய்ப்பு உள்ளது என்று கூறினார்.

நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து பிரச்சாரம் செய்த ஸ்டாலின், தமிழகத்தில் அதிகாரிகள் முதல் ஆட்சியாளர்கள் வரை ஊழல் நிறைந்திருப்பதாக கூறினார்.

நாங்குநேரி தொகுதிக்குட்பட்ட ஏர்வாடி, திருக்குறுங்குடி, மாவடி, களக்காடு, கீழக்கருவேளங்குளம், சடையமான்குளம் விலக்கு ஆகிய பகுதிகளில், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர் அவர்களை ஆதரித்து தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்’ அப்போது, “எல்லையில் நாட்டைக் காப்பாற் றிய இராணுவ வீரரான ரூபி மனோகரன் அவர்களை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுத்து, உங்கள் உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கும் வாய்ப்பினை ஏற்படுத்தித் தர வேண்டும்!” என மக்களைக் கேட்டுக்கொண்டார்.

எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் என அனைவருக்கும் பணம் கொடுத்தே ஆட்சி நடைபெறுவதாக குற்றஞ் சாட்டிய ஸ்டாலின், ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து தப்பிக்கவே அமைச்சர்கள் வெளிநாடு பயணம் மேற்கொள்வதாகவும் தெரிவித்தவர், திமுகவை விட 5 எம்.எல்.ஏக்களே அதிமுகவில் அதிகம் இருப்பதாக தெரிவித்த அவர், எந்த நேரத்திலும் அதிமுக ஆட்சி கவிழும் என குறிப்பிட்டார்.

இதனைத் தொடர்ந்து, களக்காடு பகுதியில் பரப்புரை மேற்கொண்ட ஸ்டாலின், திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட நாங்குநேரி சிறப்புப் பொருளாதார மண்டலம் மற்றும் கங்கைகொண்டான் ஐடி பார்க் ஆகிய திட்டங்களை அதிமுக அரசு கிடப்பில் போட்டதால் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றி தவித்து வருகின்றனர் என்று கூறியவர், திமுக ஆட்சிக்கு வந்ததும், அவை அனைத்தும் செயல்படுத்தப்படும் என்றார்.

தொடர்ந்து, களக்காடு பகுதியில் பரப்புரை மேற்கொண்டவர், திமுக ஆட்சிக்கு வந்ததும் களக்காட்டில், தீயணைப்பு நிலையம், கலைக்கல்லூரி அமைக்கப்படும் என தெரிவித்தார். அப்போது, உடல்நலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவரை ஏற்றிக்கொண்டு வந்த ஆட்டோவுக்கு வழிவிடுமாறு ஸ்டாலின் மைக்கில் தெரிவிக்க, உடனே தொண்டர்கள் அனைவரும் விலகி ஆட்டோவுக்கு வழிவிட்டனர்.