65 வயசுக்கு பிறகுதான் கமல்ஹாசனுக்கு ஞானோதயம் வந்துச்சா? : எடப்பாடியின் எடக்கு கேள்வி

 

கமல்ஹாசன்

சேலம்:

டிகர் கமல்ஹாசனுக்கு 65 வயதுக்கு பிறகுதான் ஞானோதயம் வந்துள்ளதா எந்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 69வது பிறந்த நாள் நிகழ்ச்சி சேலத்தில் இன்று மாலை நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு

நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிறகு பேசினார்.

எடப்பாடி பழனிச்சாமி

அப்போது அவர், “மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக தமிழகம் திகழ்ந்து வருகிறது. ஆனால் நடிகர் கமல்ஹாசன் இந்த ஆட்சி தொடரக்கூடாது என்கிறார்.

அவர்  தமிழகத்தில் எந்த கிராமத்துக்காவது சென்று மக்களை சந்தித்திருப்பாரா? அவர் முதலில் கிராமங்களுக்கு சென்று மக்களை சந்திக்கட்டும். அப்போதுதான் அதிமுக ஆட்சி பற்றி தெரிந்துகொள்ள முடியும்” என்றார்.

மேலும்,”கமல்ஹாசன்  நடித்து தயாரித்த விஸ்வரூபம் படம் வெளியாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாதான் உதவி செய்தார். அதையெல்லாம் மறந்து பேசுகிறார்.

65 வயதுக்கு பிறகுதான் அவருக்கு ஞானோதயம் வந்திருக்கிறதா” என்றும்  எடப்பாடி பழனிச்சாமி, கேள்வி எழுப்பினார்.

Leave a Reply

Your email address will not be published.