சென்னை:

திமுகவில் நிலவி வரும் பரபரப்பான சூழலில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை தலைமை நிலைய செயலாளர் பொறுப்பில் நீக்குவதாக டிடிவி தினகரன் அறிவித்து உள்ளார். ஆனால் கட்சியில் இருந்து நீக்கவில்லை.

அதிமுகவில நிலவி வரும் உள்கட்சி மோதல் காரணமாக எடப்பாடி தலைமையிலான அரசுக்கு ஆதரவை விலக்குவதாக டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் கவர்னரிடம் கடிதம் கொடுத்துள்ளனர்.

இந்நிலையில், எடப்பாடி மற்றும் ஓபிஎஸ் தலைமையிலான அதிமுக அணி,  நேற்று அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழுவை கூட்டி சசிகலாவை பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்குவதாக தீர்மானம் நிறைவேற்றியும், டிடிவி தினகரன் அறிவிப்பு செல்லாது என்றும் தீர்மானம் நிறைவேற்றினர்.

இதன் மேலும் வெகுண்டெழுந்த டிடிவி தினகரன், கட்சியின்  தலைமை நிலைய செயலாளர் பொறுப்பில் உள்ள எடப்பாடி பழனிசாமியை அந்த பதவியில் இருந்து நீக்கியும், பொருளாளர் பதவியில் இருந்து திண்டுக்கல் சீனிவாசன் நீக்கப்படுவதாகவும் அறிவித்து உள்ளார்.

இதுகுறித்து டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

 

அ.தி.மு.க. அம்மா அணி தலைமை நிலைய செயலாளர் பொறுப்பில் உள்ள எடப்பாடி பழனிசாமி இன்று முதல் அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார்.  அதற்கு பதில் முன்னாள் அமைச்சர் பழனியப்பன் அந்த பொறுப்பில் நியமிக்கப்படுகிறார்.

பொருளாளர் பொறுப்பில் உள்ள திண்டுக்கல் சீனிவாசன் விடுக்கப்பட்டு புதிய பொருளாளராக தஞ்சாவூர் எம்.எல்.ஏ. எம்.ரெங்கசாமி நியமிக்கப்படுகிறார்.

கழக பொதுச்செயலாளர் சசிகலாவின் ஒப்புதலுடன் இந்த அறிவிப்பு வெளியிடப்படுவதாக கூறப்பட்டுள்ளது.