ஓ.பி.எஸ் அணியுடன் பேச ஏழு பேர் கொண்ட குழு அமைப்பு!

சென்னை,

திமுகவில் இரு அணிகளும் இணைந்து செயல்பட எடப்பாடி அணியை சேர்ந்த 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

இன்று காலை அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தை தொடர்ந்து ஓபிஎஸ் அணியுடன் பேச்சுவார்த்தை நடத்த 7 பேர் கொண்ட குழுவை முதல்வர் பழனிசாமி அறிவித்து உள்ளார்.

தேர்தல் ஆணையத்தால் தற்காலிகமாக முடக்கிவைக்கப்பட்டுள்ள அ.தி.மு.க பெயர் மற்றும் இரட்டை இலைச் சின்னத்தை மீட்கும் முயற்சியில், இரு அணிகளும் இறங்கி உள்ளன. அதற்கு முன், கட்சி இணைப்பு, பதவிகள் குறித்து இரு தரப்பிலும் ஆலோசனை நடைபெற்றுவருகிறது.

அமைச்சர்  வைத்தியலிங்கம் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்தக் குழுவில், எஸ்.பி. வேலுமணி, தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன்,ஜெயக்குமார், சி.வி.சண்முகம் உள்ளிட்ட  ஏழு பேர் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.