எடப்பாடி பழனிசாமி தான் முதல்வர் வேட்பாளர் – அமைச்சர்

மதுரை:
திமுகவை பொறுத்தவரை எடப்பாடி பழனிசாமி தான் முதல்வர் வேட்பாளர் என்று அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி முதல்வர் வேட்பாளராக ஏற்பவர்களுடன் மட்டுமே அதிமுக கூட்டணி வைக்கும். முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்பட்டவுடன் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் எல் முருகன். அரசியலுக்கு வருபவர்கள் எம்ஜிஆர் ஆட்சியை தருவோம் எனக் கூறுவது அதிமுகவிற்கு பெருமை. முதல்வர் வேட்பாளரை பாஜக தலைமை முடிவு செய்யும் என எல் முருகன் கூறியது குறித்து அமைச்சர் செல்லூர் ராஜு பதில் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுபோன்று, முதல்வர் வேட்பாளரை அதிமுக ஏற்கெனவே அறிவித்துள்ளதால் அதன்படி தேர்தலை சந்திக்கும் என்று த.மா.கா தலைவர் வாசன் தெரிவித்துள்ளார். இதனிடையே, இன்று சுற்று பயணத்தின் போது தமிழக பாஜக மாநில தலைவர் எல் முருகன் அரியலூரில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், தமிழக சட்டமன்ற தேர்தலில் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை பாஜக தலைமைதான் முடிவு செய்யும். வேட்பாளரை அதிமுக முடிவு செய்தாலும் அதை பாஜக தான் அறிவிக்கும். தேர்தலை யாருடைய தலைமையில் சந்திப்பது என்பதையும் தேசிய தலைமைதான் முடிவு செய்யும் என்று கூறிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.