டெல்லி:
சாத்தான்குளத்தில் காவல்துறையினரால் தந்தை மகன் கொலை செய்யப்பட்ட சம்பவம், உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக  தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு  உலக பன்னாட்டு நிறுவனம் ( ஐக்கியநாட்டு சபை ) கடும் கண்டனம் தெரிவித்து கடிதம் அனுப்பி உள்ளது. இது தமிழகத்திற்கே தலைகுனிவை ஏற்படுத்தி உள்ளது.
தந்தை மகன் காவல்துறையினரால் கொலை செய்யப்பட்ட கொடுஞ்செயலுக்காக  ஐக்கியநாட்டு சபையிடமிருந்து கண்டனம் கடிதம் வாங்கும் முதல் முதல்வர் உலகிலேயே தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தான் என்பது குறிப்பிடத்தக்கது.
சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், கொடூரமாக துன்புறுத்தப்பட்டு மரணம் அடைந்தனர். இந்த விவகாரம் உலகம்  முழுவதும் பூதாகரமாக எழுந்துள்ளது. இது குறித்து மதுரை உயர்நீதி மன்றத்தின் அதிரடி நடவடிக்கை காரணமாக, தற்போது  சிபிசிஐடி விசாரணை நடைபெற்று, காவல்துறையைச் சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டு உள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் தமிழக டிஜிபிக்கு விளக்கம் கேட்டு  நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்த நிலையில், பன்னாட்டு சபையான ஐ.நா. சபையும், சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழப்பு விவகாரம் குறித்து தமிழக முதல்வருக்கு கண்டனம் தெரிவித்து கடிதம் எழுதி உள்ளது. இது தமிழகத்திற்கே தலைகுனிவை ஏற்படுத்தி உள்ளது.
முதல்வர் எடப்பாடி தலைமையிலான தமிழக அரசின் திறமையற்ற நடவடிக்கை காரணமாக இன்று தமிழகமே தலைகுனிந்து நிற்கும் அவலதுக்கு சென்றுள்ளது…