எடப்பாடி அணியினர் அனைவரும் துரோகிகள்; ஊழல்வாதிகள்: தங்க தமிழ்ச்செல்வன் அதிரடி குற்றச்சாட்டு

--

சிவகங்கை:

முதல்வர் எடப்பாடி அணியில் உள்ள அனைவரும் துரோகிகள், ஊழல்வாதிகள்  என்று டிடிவி ஆதரவு  தங்க தமிழ்ச்செல்வன் கடுமையாக தாக்கி பேசினார்.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் அமமுக  சார்பில்அண்ணாவின் 110- வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அமமுக கட்சியின்  கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ்ச்செல்வன் சிறப்புரை ஆற்றினார்.

அவர் பேசியதாவது,  முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை கமிஷன் அமைக்கப்பட்ட போது, விசாரணை 3 மாதத்தில் முடிந்துவிடும் என்று கூறினார்கள். ஆனால், விசாரணை ஒரு வருடத்தை தாண்டியும் நீண்டுக்கொண்டே செல்கிறது… இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று குற்றம் சாட்டினார்.

விரைவில் தீர்ப்பை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நாங்கள் 18 பேரும்,  நட்புக்கு மதிப்பு கொடுத்து டி.டிவி.தினகரன் அணியில் இருக்கிறோம் என்றவர்,  முதல்-அமைச்சராக உள்ள எடப்பாடி பழனிசாமி அணியில் உள்ள அனைவரும் துரோகிகள் என்றும், அனைவரும்  ஊழல் வாதிகள் என்றும் கடுமையாக தாக்கினார்.

தமிழக அமைச்சரவையில் உள்ள அனைத்து  அமைச்சர்களும் ஊழல்களில் ஜொலிக்கின்றனர் என்றவர்,  ஒவ்வொரு அமைச்சரும் தங்கள் வீட்டில் 10 ஆயிரம் கோடி ரூபாய் பதுக்கி வைத்துள்ளார்கள்.

இவ்வாறு தங்க தமிழ்ச்செல்வன் பேசினார்.