பெங்களூரு: தற்போதைய கர்நாடக பாஜக முதல்வர் பிஎஸ் எடியூரப்பா விரைவில் மாற்றப்படவுள்ளார் என்று ஆர்எஸ்எஸ் தலைமையகத்திலிருந்து தனக்கு நம்பத்தகுந்த தகவல் கிடைத்துள்ளதாக கூறியுள்ளார் அம்மாநிலத்தின் முன்னாள் காங்கிரஸ் முதல்வர் சித்தராமையா.

பிஎஸ் எடியூரப்பா, வரும் 2023ம் ஆண்டுவரை, தனது முழு பதவிகாலமும் முதல்வராக தொடர்வார் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறிய பின்னர், இத்தகவலை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சித்தராமையா கூறியுள்ளதாவது, “எந்தக் கட்சித் தலைவராவது, தனது கட்சியின் முதல்வர் விரைவில் மாற்றப்படுவார் என்று வெளிப்படையாக கூறுவார்களா? அப்படி கூறினால், அரசு நிர்வாகத்தில் பெரிய குழப்பம் ஏற்படும். ஆனால், எடியூரப்பா விரைவில் மாற்றப்படவுள்ளார்.

வரும் ஏப்ரல் மாதத்திற்கு பிறகு, அவரிடமிருந்து முதல்வர் நாற்காலி பறிக்கப்படும். ஆர்எஸ்எஸ் தலைமையகத்தில் எனக்குள்ள நம்பத்தகுந்த ஆட்களின் மூலமாக இத்தகவல் எனக்கு கசிந்துள்ளது” என்றுள்ளார் சித்தராமையா.