திருவனந்தபுரம்:
சாமி கோவிலுக்கு அள்ளிக் கொடுப்பது போல சரஸ்வதி கோவிலுக்கும் (கல்வி நிறுவனங்கள்) நன்கொடைகளை அள்ளிக் கொடுங்கள் என்று கேரள மக்களுக்கு அம்மாநில முதல்வர் பிணராயி விஜயன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
1pinaree
திருவனந்தபுரத்தில் ஒரு பள்ளியில் நடைபெற்ற ஆசிரியர் தின விழாவில் கலந்து கொண்டு பேசிய முதல்வர் பிணராயி விஜயன் “கேரள மக்கள் மதம் சம்பந்தப்பட்ட காரியங்களுக்காக அதிக நன்கொடைகளை அள்ளிக்கொடுக்கும் இயல்புடையவர்கள் என்றும். கடந்த 2012 ஆம் ஆண்டு கேரளாவில் உள்ள நான்கு தேவசம் போர்டுகளுக்கு மக்கள் கொடுத்த நிதி 1000 கோடியை தாண்டும் என்று நினைவுபடுத்தினார். ஆனால் 2016-ஆம் ஆண்டு பட்ஜெட்டில்  சர்வதேச தரத்துடன் கூடிய பள்ளிகளைக் கட்ட நமது அரசு 1000 கோடி நிதி ஒதுக்கியது.
சரஸ்வதியின் கோவிலாக விளங்கும் தாங்கள் படித்த கல்வி நிறுவனங்களுக்கு ஒருமுறையேனும் மக்கள் நன்கொடை அளித்தால்கூட அது கல்வி வளர்ச்சிக்கு பேருதவியாக இருக்கும் என்று குறிப்பிட்டார்.