சென்னை:

ல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு வழங்கப்பட்டு வரும் கல்வி உதவித்தொகையை நிறுத்தக் கூடாது என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதி உள்ளார்.

மத்திய அரசு நிர்வாக ஒதுக்கீட்டும் சேர்ந்து படிக்கும் மாணவ மாணவிகளுக்கு வழங்கப்பட்டு வரும் உதவித்தொகையை நிறுத்தப்போவதாக அறிவித்து உள்ளது.

இந்த நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, கல்வி உதவித்தொகையை நிறுத்தக்கூடாது என்று மத்திய அரசுக்கு கடிதம் எழுதி உள்ளார்.

அதில், நிர்வாக ஒதுக்கீட்டு மற்றும் ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் சேரும் எஸ்.சி/எஸ்.டி மாணவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகையில் மாற்றம் செய்யக்கூடாது என்றும் கல்வி உதவித் தொகை வழங்குவதில் கொண்டுவந்த மாற்றத்தை திரும்ப பெற வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.

தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் மெரிட் அடிப்படையில் இடம் கிடைக்காதபோது, நிர்வாக ஒதுக்கீட்டில் சேர்ந்து பயிலுவதாகவும், அந்த மாணவர்கள், கல்வி உதவித் தொகை மூலம் பலனடைந்து, கல்லூரி படிப்பை தொடர்ந்து வருகின்றனர். இதன் காரணமாக தற்போது தமிழகத்தில்  மேல்படிப்பு படிக்கும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து உள்ளது.

இந்த நிலையில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகையை நிறுத்தினால், உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி பயிலும் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும், சமூகநீதியை அடைவதில் பின்னடைவு ஏற்படும்.

எனவே, கல்வி உதவித்தொகை வழங்குவதில், மத்திய அரசு கொண்டுவந்த மாற்றத்தை திரும்பப் பெற வேண்டும். கல்வி உதவித்தொகையில் மத்திய அரசு 60 சதவீதம், மாநில அரசு 40 சதவீதம் என்ற விகிதாச்சார பங்களிப்பே தொடர வேண்டும் கல்வி உதவித்தொகையில் மத்திய அரசின் பங்களிப்பான ஆயிரத்து 803 கோடியே 50 லட்சம் ரூபாயை வழங்க வேண்டும்.

இவ்வாறு முதல்வர்  எடப்பாடி பழனிசாமி அந்த கடிதத்தில்  கேட்டுக் கொண்டுள்ளார்.