கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, ஜார்கண்ட் மாநிலத்தில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 14ந்தேதி வரை அனைத்து கல்வி நிறுவனங்கள் உள்பட மக்கள் கூடும் இடங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.

இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக நாடு முழுவதும் கல்வி நிறுவங்களுக்கு விடுமுறை விட மத்தியஅரசு அறிவுறுத்தி உள்ளது. இது மட்டுமின்றி மாநில அரசுகளும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்கவும், சினிமா தியேட்டர், மால்கள், பூங்காக்கள், சுற்றுலா ஸ்தலங்கள், இறைவழிபாடு ஸ்தலங்கள், கடற்கரை உள்பட பொழுதுபோக்கு ஸ்தலுக்கும் விடுமுறைவிட அறிவுறுத்தி உள்ளன.

இந்த நிலையில் ஜார்கண்ட் மாநிலத்திலும், கல்வி நிலையங்கள், பல்கலைக்கழகங்கள்,   மால்கள், சினிமா அரங்குகள், கிளப்புகள், அருங்காட்சியகங்கள் ஏப்ரல் 14 வரை மூட  ஹேமந்த் சோரன் தலைமையிலான மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது.