‘ராஷ்டிரிய சிக்ஷா கவுரவ் புரஸ்கார் 2021’ விருது பெற்ற நடிகர் தாமு….!

திரைப்படத் துறையைத் தாண்டி கல்வித் துறையில் கடந்த 10 ஆண்டுகளாக ஆற்றிய சேவைகளுக்காக நடிகர் தாமுவுக்கு தேசிய கல்வி வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி மையம் ( CEGR National Council) ‘ராஷ்டிரிய சிக்ஷா கவுரவ் புரஸ்கார் 2021’ தேசிய கல்வியாளருக்கான கவுரவ விருது அளித்துள்ளது.

நிகழ்ச்சியில் மறைந்த நடிகர் விவேக் திருவுருவப் படத்திற்கு நடிகர் தாமு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.

தமிழ்த் திரையுலகில் நகைச்சுவை நடிகராக அறியப்படும் தாமு மறைந்த இயக்குநர் கே.பாலச்சந்தரிடம் சினிமா கற்றவர்.