ஆர்.கே.நகரில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு! 4.30 மணி நிலவரம்

சென்னை,

ஆர்.கே.நகர் தொகுதியில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.  நீண்ட வரிசையில் நின்று வாக்காளர்கள்  ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.

காலை எட்டு மணிக்கு வாக்குப் பதிவு துவங்கிய நிலையில் காலை ஏழு மணி முதலே ஏராளமானோர் வாக்குச் சாவடி மையங்களுக்கு வரத் தொடங்கினர். வாக்குப் பதிவு துவங்கிய உடன் வரிசையில் காத்திருந்தவர்கள் ஒவ்வொருவராக உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

ஏராளமான ஆண்களும், பெண்களும், இளைஞர்களும், இளம் பெண்களும் ஆர்வத்துடன் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.

வாக்குப்பதிவு விவரம்:

பிற்பகல் 4/30 மணி நிலவரம்: 65% வாக்குப்பதிவு

பிற்பகல் 4 மணி நிலவரம்:  59.29% வாக்குப்பதிவு

பிற்பகல் 3 மணி நிலவரம்:  57.16% வாக்குப்பதிவு

மதியம்  1 மணி நிலவரம்: 41.06 சதவிகித வாக்குப்பதிவு

மதியம்  12 மணி நிலவரம்: 34 சதவிகித வாக்குப்பதிவு

காலை 11 மணி நிலவரம்: 24.01 சதவிகித வாக்குப்பதிவு

காலை  9 மணி நிலவரப்படி 7.32 விழுக்காடு வாக்குகள் பதிவு நடைபெற்றிருந்தது.

 

தி.மு.க வேட்பாளர் மருதுகணேஷ் பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள வாக்குச் சாவடியில் தனது குடும்பத்துடன் சென்று வாக்களித்தார். அதிமுக வேட்பாளர் மதுசூதனன் மகாராணி தியேட்டர் அருகே உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.