சிம்புவின் ‘ஈஸ்வரன்’ படத்தின் பாடல்கள் வெளியீடு….!

சுசீந்திரன் இயக்கத்தில் சிலம்பரசன் நடித்துள்ள திரைப்படம் ஈஸ்வரன். நிதி அகர்வால், பாரதி ராஜா உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

தீபாவளி அன்று ஈஸ்வரன் படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. டீஸருக்கு அமோக ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டார் சுசீந்திரன்.

பொங்கல் பண்டிகை ஸ்பெஷலாக தியேட்டர்களில் ரிலீஸாக உள்ளது இப்படம் .

இப்படத்தின் தமிழ்நாடு திரையரங்க உரிமையை 7G பிலிம்ஸ் கைப்பற்றியுள்ளது. ஓவர்சீஸ் உரிமையை AP இன்டர்நேஷனல் நிறுவனம் கைப்பற்றியுள்ளது என்ற தகவலை தெரிவித்துள்ளது தயாரிப்பு நிறுவனம் மாதவ் மீடியா. ஈஸ்வரன் படத்தின் போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகள் போய் கொண்டிருப்பதாக தகவல் வெளியானது. படத்தின் இசையமைப்பாளர் தமன், பின்னணி இசை கோர்ப்பு பணிகளை முடித்து விட்டதாக பதிவு செய்திருந்தார்.

இந்த படத்தின் முதல் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தின் இசை வெளியீடு நேற்று கோலாகலமாக சென்னையில் உள்ள பிரபல ஆல்பர்ட் திரையரங்கத்தில் நடைபெற்றது. இந்த படத்தின் பாடல்களை ரசிகர்கள் முன்னிலையில் படக்குழுவினர் வெளியிட்டனர்.