நீ அழிக்கிறதுக்காக வந்த அசுரன்னா , நான் காக்கிறதுக்கு வந்திருக்கும் ஈஸ்வரன் டா….!

சுசீந்திரன் இயக்கத்தில் சிலம்பரசன் நடித்து உருவான திரைப்படம் ஈஸ்வரன். இந்த படத்தில் நிதி அகர்வால், பாரதிராஜா, நந்திதா, பால சரவணன் ஆகியோர் நடித்துள்ளனர். தமன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இப்படத்தின் தமிழ்நாடு திரையரங்க உரிமையை 7G பிலிம்ஸ் கைப்பற்றியுள்ளது. ஓவர்சீஸ் உரிமையை AP இன்டர்நேஷனல் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. ஈஸ்வரன் படத்தின் டீஸர் மற்றும் தமிழன் பாட்டுக்கு அமோக வரவேற்பு கிடைத்தது.

இந்நிலையில் இந்த படத்தின் டிரெய்லர், படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. வசனங்களும் நிச்சயம் கவனம் பெறும் என்று தெரிகிறது.