தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியான ‘ஈஸ்வரன்’ படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்து வருகிறது.

இந்த படத்தில் சிம்புவுடன் நிதி அகர்வால், நந்திதா ஸ்வேதா, இயக்குனர் பாரதிராஜா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஈஸ்வரன் படத்தை இயக்குநர் சுசீந்திரன் இயக்கியுள்ளார்.

திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வரும் இந்த படத்தின் ஓப்பனிங் பாடலான தமிழன் பாட்டு வீடியோவை வெளியிட்டுள்ளனர் படக்குழுவினர். அனந்து, தமன் மற்றும் தீபக் பாடிய இந்த பாடலை யுகபாரதி எழுதியுள்ளார்.