சுசீந்திரன் இயக்கத்தில் சிலம்பரசன் நடித்து உருவான திரைப்படம் ஈஸ்வரன். இந்த படத்தில் நிதி அகர்வால், பாரதிராஜா, நந்திதா, பால சரவணன் ஆகியோர் நடித்துள்ளனர். தமன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இப்படத்தின் தமிழ்நாடு திரையரங்க உரிமையை 7G பிலிம்ஸ் கைப்பற்றியுள்ளது. ஓவர்சீஸ் உரிமையை AP இன்டர்நேஷனல் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. ஈஸ்வரன் படத்தின் டீஸர் மற்றும் தமிழன் பாட்டுக்கு அமோக வரவேற்பு கிடைத்தது.

இந்நிலையில் படத்தின் வெள்ளி நிலவே பாடலின் லிரிக் வீடியோ வெளியானது. கூட்டு குடும்பங்களின் அருமையை உணர்த்தும் இந்த பாடலை ML காயத்ரி பாடியுள்ளார். யுகபாரதி பாடல் வரிகள் எழுதியுள்ளார்.