தமிழகத்தில் முட்டை விலை கிடு கிடு உயர்வு!

நாமக்கல்,

மிழகத்தில் முட்டை விலை கிடு கிடுவென உயர்ந்துள்ளது. தற்போது கடைகளில் ஒரு முட்டையின் விலை 6 ரூபாய் மற்றும்  6.50 காசு என்றும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

நாமக்கல்லில்  ஒரு முட்டையின் விலை  ரூ.5.16 ஆக உயர்த்தப்பட்டு உள்ளதால், சில்லரை கடைகளிலும் முட்டையின் விலை கனிசமாக உயர்நந்துள்ளது.

தற்போது குளிர்காலம் தொடங்கி உள்ளதால், அசைவ பிரியர்கள் மாமிசங்களை நாடுவதை விட முட்டைக ளையே அதிகம் நாடுவர். இதன் காரணமாக முட்டையின் தேவை அதிகரித்து, விற்பனையும் சூடுபிடித்து வருகிறது.

இதன் காரணமாக 4.74 ரூபாய் விற்பனை செய்யப்பட்டு வந்த முட்டை விலை  ஒரே நாளில் 42 காசுகள் அதிகரித்து ரூ.5.16 ஆக உயர்துள்ளது.

நாமக்கல்லில் நடைபெற்ற  தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் விலை நிர்ணயக்குழு கூட்டத்தில்,  ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 16 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டது. இதன் காரணமாக சில்லரை கடைகளிலும் முட்டை விலை அதிகரித்துள்ளது.

சில்லரை கடைகளில் ரூ.6.50 வரை விற்பனை செய்யப்படுகிறது.