டெல்லி: இதுவரை இல்லாத அளவுக்கு முட்டை விலை கடும் உயர்ந்துள்ளது. இது சாமானிய மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக  அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்கத்தால்,  நாமக்கல் மண்டலத்தில் முட்டை உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டது.  அதனால் விலையும் குறைந்தது. மேலும், கொரோனா தொற்றுக்கு எதிராக,  நோய் எதிர்ப்பு சக்தி பெற முட்டை சாப்பிட அரசும், சுகாதாரத்துறையிம் வலியுறுத்தியதால், முட்டை விற்பனை  அதிகரித்தது.

தற்போது ஊரடங்களில் தளர்வு வழங்கப்பட்டு இருப்பதால், படிப்படியாக முட்டை விற்பனை  மேலும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. இதனால்,   கடந்த அக்டோபர் மாதம் முட்டை கொள்முதல் விலையை உயர்த்த முடிவு செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக நாமக்கல் மண்டலத்தில் முட்டையின் பண்ணை கொள்முதல் விலை 15 காசுகள் அதிகரிக்கப்பட்டு, 4.15 ரூபாயாக ஒரு முட்டை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், வட மாநிலங்களில் நிலவும் கடுங்குளிர் மற்றும் காய்கனி பற்றாக்குறையால் அதிகப்படியான முட்டை விற்பனை செய்யப்படுவதால், விலை மேலும் உயர்ந்துள்ளது.

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் அறிவிப்பின்படி நாமக்கல் மண்டலத்தில் கடந்த வாரம் 2 ரூபாய் 94 காசுகளாக இருந்த முட்டை விலை தற்போது 19 பைசா உயர்ந்துள்ளது. தற்போது பெங்களூருவில் மற்றும் ஹைதராபாத்தில் 3 ரூபாயாகவும், சென்னையில் 3 ரூபாய் 20 காசுகளாகவும், டெல்லியில் 3 ரூபாய் 48 காசுகளாகவும் முட்டை விற்கப்படுகிறது.

இந்த விலை உயர்வு கடந்த 3 வருடங்களில் அதிகம் என்றும், இன்னும் சில நாட்கள் இதே நிலைமை நீடிக்கும் என்றும் என்இசிசி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தற்போது தமிழகத்தில்  முட்டை விலை 4.20 காசு முதல் 4.40 காசுகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.