ராய்ச்சூர்

த்தீஸ்கர் மாநிலத்தில் மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவில் இனி முட்டைகள் வழங்க உள்ளதாக அம்மாநில முதல்வர் பூபேஷ் பாகல் தெரிவித்துள்ளார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு தேசிய கல்வித்துறை வெளியிட்டுள அறிக்கையின்படி மாணவர்களுக்கு புரதச் சத்துக் குறைவு உள்ளதால் மதிய உணவுடன் முட்டை அளிக்க வேண்டும் என தெரிவித்தது. ஆனால் இமாசலப் பிரதேசம், அரியானா, உத்திரப் பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், மத்தியப் பிரதேசம், கோவா, சத்தீஸ்கர், அருனாசல பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் முட்டைகள் அளிக்கப்படவில்லை. இதில் பல மாநிலங்களில் அப்போது பாஜக ஆட்சி செய்து வந்தது.

தற்போது நடந்த சட்டப்பேரவை தேர்தலில் சத்தீஸ்கரில் பாஜக தோல்வி அடைந்து காங்கிரஸ் ஆட்சி அமைத்துள்ளது. சத்திஸ்கர் முதல்வராக பூபேஷ் பாகல் பதவி ஏற்றுள்ளார். நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில், “தேசிய கல்வித்துறை அறிவித்துள்ளபடி சத்தீஸ்கர் மாநிலத்தில் மாணவர்களுக்கு மதிய உணவுடன் முட்டை வழங்கப்பட உள்ளது.

முட்டை உண்ணும் பழக்கம் இல்லாத மாணவர்களுக்கு அதற்கு பதிலாக பால் அல்லது வேறு ஏதாவது புரோட்டின் நிறைந்த உணவு வகைகள் வழங்கப்படும். அது மட்டுமின்றி சோயா பால், சோயா பிஸ்கட்டுகள், சோயா அப்பளம் ஆகியவைகள் புரதச் சத்து நிறைந்துள்ளதால் அவைகலும் வழங்கப்படும். அது மட்டுமின்றி பழங்கள் ஆகியவைகளும் வழங்கப்படும்.” என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது