அந்நியச் செலாவணி வழக்கு: சசிகலாவை கோர்ட்டில் ஆஜர்படுத்த கர்நாடக சிறைத்துக்கு உத்தரவு

சென்னை:

ந்நியச் செலாவணி வழக்கில் குற்றப்பத்திரிகை பதிவு செய்யப்பட உள்ள நிலையில், விசாரணைக்கு சசிகலாவை நேரில் ஆஜர்படுத்த கர்நாடக சிறைத்துறைக்கு எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

ஜெ.ஜெ. தொலைக்காட்சிக்கு வெளிநாடுகளில் இருந்து ஒளிபரப்பு சாதனங்கள் இறக்குமதி செய்ததில் முறைகேடு நடைபெற்றதாக கூறப்பட்டது. இதுகுறித்து அந்நிய செலாவணி வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கில் சசிகலாமீது மறுகுற்றச்சாட்டு பதிவு செய்யப்பட உள்ள நிலையில், வரும் 13ந்தேதி நீதி மன்றத்தில் அவரை ஆஜர்படுத்த வேண்டும் என்று நீதிபதி கர்நாடக சிறைத்துறைக்கு உத்தர விட்டு உள்ளார்.

டந்த 2017ம் ஆண்டு  ஜூலை மாதம் அந்நிய செலாவணி மோசடிதொடர்பாக சசிகலா உறவினர் பாஸ்கரன் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.  அதைத்தொடர்ந்து,  பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவுக்கு எதிராக, காணொளி காட்சி வழியாக கடந்த 30ந்தேதி  குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்பட்டது. ஆனால், அப்போது சசிகலாவை கர்நாடக சிறைத்துறை ஆஜர்படுத்தவில்லை.

இந்த நிலையில், தற்போது மீண்டும் சசிகலாமீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட உள்ளது. அதற்காக வரும் 13-ம் தேதி சசிகலாவை நீதிமன்றத்தில்  ஆஜர்படுத்த கர்நாடக சிறைத்துறைக்கு நீதிபதி மலர்மதி உத்தரவிட்டுள்ளார்.

கார்ட்டூன் கேலரி