சென்னை:

தென்னிந்தியாவின் சிறந்த நிலையமாக ரயில் நிலையமாக எழும்பூர் ரயில் நிலையம் தேர்வு செய்யப்பட்டு, அதற்கான ஐஎஸ்ஓ சான்றிதழ் பெற்றுள்ளது.

ஏற்கனவே கடந்த ஜூன் மாதம் தென்மேற்கு ரயில்வேயில் மைசூரு ரயில் நிலையம்  ஐஎஸ்ஓ சான்றிதழ் பெற்றிருந்த நிலையில், தற்போது தென்னிந்தியாவில் எழும்பூர் ரயில் நிலையம் ஐஎஸ்ஓ சான்றிதழ் பெற்றுள்ளது.

ரயில்கள் இயக்கம், சிக்னல் மற்றும் தகவல் தொடர்பு , ரயில் நிலைய பராமரிப்பு, டிக்கெட் முன்பதிவு, பயணிகளுகான வசதிகள், பார்சல்களை கையாள்தல் ஆகியவற்றில் தென்னிந்தியா வில் எழும்பூர் ரயில் நிலையம் சிறந்து விளங்குவதாக சுற்றுச் சூழல் மேலாண்மை அமைப்பின் ஐஎஸ்ஓ தரச்சான்று (ISO 14001: 2015) விருது பெற்றுள்ளதாக தென்னக ரயில்வே தனது முக நூலில் தெரிவித்துள்ளது.