கெய்ரோ:

எகிப்து மசூதியில் தொழுகையின் போது நடந்த குண்டு வெடிப்பு, துப்பாக்கி சூட்டில் 184 பேர் கொல்லப்பட்டனர்.

வடக்கு செனாய் பகுதியில் மசூதியில் பயங்கரவாதிகள் வெடிகுண்டை வெடிக்க செய்து உள்ளனர், துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தி உள்ளனர். பாதுகாப்பு படை ஆதரவாளர்கள் தொழுகையில் ஈடுபட்ட போது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி உள்ளனர் என பாதுகாப்பு படை தகவல்கள் தெரிவித்து உள்ளது.

அல்-ரவுடாக் மசூதியில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 75 பேர் காயம் அடைந்துள்ளன. இந்த தாக்குதலில் 184 பேர் உயிரிழந்துள்ளனர் என அந்நாட்டு மீடியா செய்தி வெளியிட்டுள்ளது. மருத்துவமனைகளில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பலி எண்ணிக்கை உயரலாம் எனவும் அஞ்சப்படுகிறது.

வடக்கு செனாயில் ஐ.எஸ். பயங்கரவாதிகளுடன் பாதுகாப்பு படை சண்டையிட்டு வருகிறது. இதுவரையில் சண்டையில் பயங்கரவாதிகள் 100 பாதுகாப்பு படை வீரர்களை கொன்றுள்ளனர். கடந்த 3 வருடமாக பாதுகாப்பு படையினர் அங்கு தொடர்ச்சியாக சண்டையிட்டு வருகிறார்கள். பயங்கரவாதிகள் தொடர்ச்சியாக பாதுகாப்பு படையினரை குறிவைத்து தாக்குதலை முன்னெடுத்து வருகிறார்கள். தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனரா என்பது தொடர்பான தகவல்கள் வெளியாகவில்லை.

இந்த தாக்குதல் குறித்து எகிப்த் அதிபர் அப்துல் ஃபத்தா அல் சிசி பாதுகாப்பு படை அதிகாரிகளும் நடத்தி வருகிறார்.